டெல்லி:  ஆட்சியின்போதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வில்லை என்று சாடியுள்ள பகுஜன் சமாஷ் கட்சி தலைவர்  மாயாவதி, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கவும் முன்வரவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடு முழுவதும் ஜாதி வாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு, அதற்கு மறுத்து வருகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய மக்கள் கணக்கெடுப்பில், ஜாதி கணக்கெடுக்க மக்கள் விரும்புவது தெளிவாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி உள்பட பலர் மீண்டும் ஜாதி வாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அதே வேளையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், மக்களிடையே உள்ள ஒற்றுமை மேலும் சீர்குலையை வாய்ப்பு உள்ளதாகவும், ஒவ்வொரு அமைப்பினரும் தாங்கள் இத்தனை சதவிகிதம் உள்ளோம், அதனால் எங்களுக்கு அரசு பணி உள்பட அனைத்திலும் முன்னுரிமை வேண்டும் , தங்களுக்குத்தான் அதிக உரிமை என என போர்க்கொடி தூக்கினால், மக்களிடையே வேண்டத்தகாத பிரச்சினைகளும் ஜாதிய மோதல்களும் உருவாகும் சூழல் ஏற்படும். இதனால், அனைவரும் ஒன்றே என்ற நிலை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய தலித் கட்சியான அகில இந்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயவதி இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரும் காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சிக்காலத்தில் நடத்தாதது ஏன்?  என கேள்வி எழுப்பியதுடன், தற்போது,  காங்கிரஸ் கட்சி, பிரயாக்ராஜில் ‘அரசியல் சாசன கவுரவ மாநாடு’ நடத்த போவதாக அறிவித்து உள்ளது.   ஆனால், அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு அவரது வாழ்நாளிலும், அவரது மறைவுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி ‘பாரத ரத்னா’ விருது வழங்கவில்லை. அதனால் அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள்.

அம்பேத்கர் இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த கன்சிராம் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி ஒருதடவை கூட துக்கம் அனுசரித்தது இ்ல்லை. அச்சமயத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சியும் துக்கம் அனுசரிக்கவில்லை. இந்த கட்சிகளின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி ஆகிய  இரு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் கூறியுள்ளார்.

“மத்தியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ் ஏன் தேசிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை, இப்போது அதைப் பற்றிப் பேசுகிறார்கள்,  பகுஜன் சமாஜ் கட்சி எப்போதுமே அதற்கு ஆதரவாகவே இருந்து வருகிறது, ஏனெனில் அதன் நடத்தை மிகவும் அதிகமாக உள்ளது. நலிந்த பிரிவினரின் நலனில் முக்கியமானது.” . “எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர் எந்தத் தேர்தலிலும் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சிகளான SP, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது நலமாக இருக்குமா? இது நடக்கவே நடக்காது, எனவே இப்போது அவர்கள் தனித்து நிற்க வேண்டும். , இதுதான் தனது அறிவுரை என்றும் மாயாவதி கூறினார்.

முன்னதாக,  பிரயாக்ராஜில் ‘சம்விதான் சம்மன் சம்மேளனில்’ (அரசியலமைப்பு தொடர்பான மாநாடு)விழாவில் பேசிய ராகுல்காந்தி தனது உரையின் போது, ​​நாடு தழுவிய ஜாதிக் கணக்கெடுப்புக்கான தனது உறுதிப் பாட்டை வலியுறுத்தினார். உரையாற்றும் போது, ​​காங்கிரஸ் எம்.பி., முன்னாள் மிஸ் இந்தியா பட்டியலை சரிபார்த்ததாகவும் ஆனால் வெற்றியாளர்களில் தலித், பழங்குடியினர் அல்லது ஓபிசி இல்லை என்று கூறினார். 90 சதவீத மக்களின் பங்களிப்பு இல்லாமல் நாடு இயங்க முடியாது என்று அவர் குற்றம் சாட்டினார்.

“தலித், ஆதிவாசி (பழங்குடியினர்) அல்லது ஓபிசி பெண்கள் இல்லாத மிஸ் இந்தியா பட்டியலை நான் சரிபார்த்தேன். சிலர் கிரிக்கெட் அல்லது பாலிவுட் பற்றி பேசுவார்கள். செருப்புத் தைக்கும் தொழிலாளியையோ பிளம்பர்களையோ யாரும் காட்ட மாட்டார்கள். மீடியாவில் டாப் ஆங்கர்கள் கூட இல்லை. 90 சதவீதத்தில் இருந்து,” என்று அவர் கூறினார்.

“மோடிஜி யாரையோ அரவணைத்துக்கொண்டார், நாங்கள் வல்லரசு ஆகிவிட்டோம் என்று சொல்வார்கள். 90 சதவீத மக்கள் பங்கேற்பு இல்லாத நிலையில் நாங்கள் எப்படி வல்லரசு ஆனோம்?” என்று நாட்டின் பிரதான ஊடகங்களைத் தாக்கி அவர் கேள்வி எழுப்பினார். ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற தனது கோரிக்கையின் மூலம் நாட்டைப் பிரிக்க முயற்சிப்பதாக பாஜக கூறக்கூடும் என்று காந்தி குற்றம் சாட்டினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்