டெல்லி

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சரவதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

xr:d:DAFS8ZX784U:2,j:42121004388,t:22112509

இந்திய அணியின் முக்கிய தொடக்க வீரராக கடந்த 2010-ம் ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் இடம்பெற்ற ஷிகர் தவான். விளையாடினார்.  2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான், 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தொடக்க வீரராக, ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்க தொடங்கி அந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் இதுவரை விளையாடிய சிறப்பான தொடக்க வீரர்கள் பட்டியலில் அவரும் இடம்பிடித்தார்.

அவர் ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டி20 தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். பிறகு தனது வயது முதிர்வாலும், ஃபார்ம் அவுட்டாலும் இந்திய அணியில் இடம்பெறாமலே இருந்தார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்த ஷிகர் தவான் தற்போது அவரது 38-வது வயத்தில் சர்வேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஷிகர் தவானுக்கு பல ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வந்தது.  இந்த நிலையில் இன்று காலை அவர் வீடியோ வெளியிட்டு அதில் மனம் உருகி அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஷிகர் தவான் ஓய்வு முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.