சென்னை: பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்டின் நிறுவனம் தயாரித்துள்ள  இந்தியாவின் முதல் Reusable ராக்கெட்  நாளை வானில் பாய்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன்  என்ற நிறுவனம்,  மீண்டும் பயன்படுத்தப்படும் வைகியலான சிறிய ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இந்த  ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரம் முறைகேட்டில் ஈடுபட்டவர் பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்ட்டின். இவரது நிறுவனம்  தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளது. இவரர்மீதும், இவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்கள் மீதும் ஏராளமான குற்றச்சா்டுக்கள் கூறப்பட்டனர். அதுதொடர்பான ரெய்டுகளும் நடைபெற்றன. அப்படி இருக்கும் வகையில், மார்ட்டின் நிறுவனம்,  ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில், மத்தியில், மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கி உ்ளளது.

அதாவது, மத்திய பாஜக அரசுக்கும், தமிழ்நாட்டில்ஆட் செய்துவரும் திமுக அரசுக்கும் அதிக அளவிலான நிதியை வழங்கியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் வெளியே வந்து, பேசும்பொருளானது.

இ்ந்த நிலையில்  மார்ட்டின் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய ஸ்டார்டப் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறது. அதன் பெயர்  ஸ்பேஸ் ஸோன் இந்தியா [Space Zone India ] இந்த நிறுவனம் சார்பில்,  மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாகியுள்ளது.   இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும்.

இந்த ராக்கெட்டானது,  மூன்று சோதனை செயற்கைக்கோள்களுடன்  நாளை மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து  விண்ணில் பாய உள்ளது. நாளை, காலை 7 மணியளவில் லான்சர் மூலம் வானில் ஏவப்பட்ட உள்ளது.

சுமார். 3.50 மீட்டர்கள் அளவு  உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ., துாரம் உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இதுகுறித்து கூறிய ஸ்பேஸ் ஸோன் இந்தியா தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்  கூறும்போது,  இந்த ராக்கெட், சோதனை முயற்சியாக,  மாமல்லபுரம் அருகில் வரும், 24ம் தேதி காலை வானில், 80 கி.மீ., துாரம் ஏவப்படுகிறது. பின், ராக்கெட்டின் சில பாகங்கள் தவிர, முக்கிய பாகம், ‘பாராசூட்’ வாயிலாக மீண்டும் பூமிக்கு திரும்பும் என்றார்.  மேலும்,  சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிக்கும் புதிய முயற்சியில் தங்களது நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறியதுடன்,  எங்கள் குழுமத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ராக்கெட் அறிவியல், விண்வெளி தொழில்நுட்பத்தில் மாணவர்களை ஊக்குவிக்க உள்ளோம். இதற்காக, மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட் திட்டத்திற்கு, 4 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து கூறிய  ‘இஸ்ரோ’ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ”அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம், ராக்கெட் ஏவுவதை புரட்சிகரமாக மாற்ற தயாராக உள்ளது. உலகளவில் செயற்கைக்கோளின் சந்தை மதிப்பு, 500 பில்லியன் டாலராக உள்ளது. அதில், இந்தியாவின் பங்கு, 3 சதவீதம். இது, 2030ல் 10 சதவீதமாக உயரும். இதற்கு தனியார் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும்,” என்றார்.

இதுகுறித்து கூறிய ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம்,  விண்வெளி கண்டுபிடிப்புகளில், உலகளாவிய தலைமை இடத்திற்கு, இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு, நிலையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளின் தேவை மிகவும் அவசியம்.

அதன்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும். அதை மனதில் வைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில், ‘மிஷன் ரூமி 2024’ ராக்கெட் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை, கேளம்பாக்கத்தில் உள்ள எங்கள் நிறுவனத்தில் உருவாக்கி யுள்ளோம். மொத்தம், 60 – 80 கிலோ எடையில் சோதனை ராக்கெட்டில், ‘நைட்ரஸ் ஆக்சைடு’ உள்ளிட்ட எரிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ராக்கெட்டின் உயரம், 3.50 மீட்டர். இது, பூமியில் இருந்து வானில், 80 கி.மீ., துாரம் உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. இது, மூன்று சோதனை செயற்கைக்கோளை சுமந்தபடி, மாமல்லபுரம் அருகில் வானில் ஏவப்படும். இந்த செயற்கைக்கோள்கள், புறஊதா கதிர் வீச்சு, காமா கதிர் வீச்சு, காற்றின் தரம், ராக்கெட் செல்லும்போது ஏற்படும் அதிர்வு உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உதவும்.

பூமியில் இருந்து திட்டமிடப்பட்ட துாரம் சென்ற பின், செயற்கைக்கோள் இருந்த பகுதி தவிர, மற்ற ராக்கெட் பாகங்கள், ‘பாராசூட்’ உதவியுடன் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் கடலில் விழும். அதை எடுத்து, சிறிய மாற்றங்கள் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் செலவு குறையும். இதுவே, இந்தியாவின் முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் என்ற சிறப்பை பெறும் என்றார்.

இதுகுறித்து மார்ட்டின் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட உள்ளது.

🚀 ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு, ஸ்பேஸ் சோன் இந்தியா, மார்ட்டின் குழுமத்துடன் இணைந்து, தனது புதிய சாதனையை – நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை வெளியிடுகிறது. நெகிழ்வுத்தன்மை மற்றும் மறுபயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் ஏவுதல் மூன்று CUBE செயற்கைக்கோள்கள் மற்றும் ஐம்பது PICO செயற்கைக்கோள்களை ஒரு துணைக்கோளில் செலுத்தும்.

முக்கிய அம்சங்கள்:
1. அனுசரிப்பு ஏவுதளக் கோணம்: ராக்கெட்டின் ஏவுதல் கோணத்தை 0 முதல் 120 டிகிரி வரை நன்றாகச் சரிசெய்து, துல்லியமான பாதைக் கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது.
2. ⁠கல்வி தாக்கம்: இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த இலவச பயிலரங்கில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளன.
3. ⁠CO2-தூண்டப்பட்ட பாராசூட் சிஸ்டம்: ஒரு புதுமையான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வம்சாவளி பொறிமுறையானது ராக்கெட் பாகங்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதை உறுதி செய்கிறது.
4. விண்வெளி ஆய்வுக்கு அப்பால்: பயன்பாடுகள் விண்வெளி ஆய்வுக்கு அப்பால் விவசாயம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பகுதிகளுக்கு விரிவடைகின்றன.

📍 இடம்: TTDC மைதானம், திருவிடந்தை, ECR, சென்னை

இந்த தருணம் மார்ட்டின் குழுமம் மற்றும் ஸ்பேஸ் சோன் இந்தியா இடையேயான மூன்றாவது ஒத்துழைப்பைக் குறிக்கிறது.

•⁠ 2021 இல், ‘டாக்டர். APJ அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி பேலோட் க்யூப்ஸ் சவால் 2021′ – 1200 மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 FEMTO செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
• ⁠தொடர்ந்து, 2023 இல் ‘டாக்டர். APJ அப்துல் கலாம் மாணவர்களின் செயற்கைக்கோள் ஏவுதல் – 2023’, நாடு முழுவதும் உள்ள அரசு, பழங்குடியினர் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள், 150 PICO ஆராய்ச்சி செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு மாணவர் செயற்கைக்கோள் ஏவுதல் (ராக்கெட்) பணியை வடிவமைத்து உருவாக்கிய குழுவில் இடம்பெற்றுள்ளனர். . சோதனை க்யூப்ஸ்.

இந்த சவால்கள் புத்தாக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே விண்வெளி அறிவியலில் ஆர்வத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே இந்த பரபரப்பான சாகசத்தில் எங்களுடன் சேர்ந்து, இந்திய விண்வெளியில் வரலாற்று தருணத்தின் ஒரு பகுதியாக இருங்கள்! 🌠🇮🇳✨

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!