கொல்கத்தா:  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொல்கத்தா பெண்மருத்துவர் பாலியல் கொலை விவகாரம் தொடர்பாக, அந்த மருத்துவமனையின் முன்னாள்  தலைவர் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமனற்ம் அனுமதி அளித்துள்ளது.

 மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், மம்தா அரசு முறையாக செயல்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் முன்பே சம்பவம் நடந்த  ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சில விஷமிகளால் தாக்கப்பட்டு, ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான மம்தா அரசின் காவல்துறை ஒரே ஒருவரை மட்டுமே கைது செய்தது. இதனால்,  மம்தா அரசுக்கு எதிராக மேற்குவங்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இநத் நிலையில்,  ஆா்.ஜி. கா் மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் இதர 4 மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம்  அனுமதி வழங்கியது. இவ்வழக்கில் கைதான முக்கிய நபரான சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 மருத்துவர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த  நீதிமன்றத்திடம் சிபிஐ அனுமதி கோரியுள்ளது.

எந்தவொரு வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் அந்த நபரின் ஒப்புதல் தேவை.  அதன் அடிப்பைடயியே சிபிஐ அனுமதி பெற்றுள்ளது.