டெல்லி

ன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு மலேசிய பிரதமா் அன்வா் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.  அவர் கடந்த 2022ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவரது முதல் முறையாக இந்திவந்துள்ளார்.. நேற்று டெல்லியில் உள்ள பிரதமா் மோடி இல்லத்தில், மோடி – அன்வா் இப்ராகிம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்த பின்னா் இருவரும் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தனர். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் சந்தித்துப் பேசியுள்ளார். இரு நாடுகளில் உள்ள பிரச்சினைகள், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.