இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார்.
2022ம் ஆண்டு மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிம் அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக கடந்த திங்களன்று இந்தியா வந்த அவர் நேற்று பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரை சந்தித்தார்.
மஹாதீர் முகம்மது பிரதமராக இருந்த போது இருநாட்டு உறவில் சர்ச்சை எழுந்த நிலையில் இந்தியா – மலேசியா இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த அன்வர் இப்ராஹிம் இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று சந்தித்து பேசினார்.
[youtube-feed feed=1]மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை…