திருவனந்தபுரம்:  வயநாடு நிலச்சரிவில்  சிக்கி, 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்  ஒட்டு மொத்தமாக  அனைவரும் பலியாகி உள்ளனர், 291 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர் என  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனையான தகவல்களை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 30-ம்தேதி வயநாடு பகுதியில் பயங்கரநிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைப்பகுதிகளான முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அது மட்டுமின்றி மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இதில், 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில், 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இந்த பேரழிவிலிருந்து தப்பியவர்களுக்கு மாநில அரசு சார்பில் அவசர உதவித் தொகையாக ரூ.10,000 அறிவிக்கப்பட்டது. மேலும் உயிர் தப்பியவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவி செய்து வருகின்றன.

இதுகுறித்து  திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த  கேரள முதல்வர் பினராயி விஜயன்,  வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளனர்  ஒருவர் கூட எஞ்சியிருக்கவில்லை என்றும் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

,  நிலச்சரிவில் சிக்கியவர்களில் 119 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும்,  இதுவரை 179 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

வயநாடு பேரிடர் பகுதியில் மொத்தம் 729 குடும்பங்கள் இருந்தனர். தற்போது, . இதில் 219 குடும்பங்கள் தற்போது முகாம்களில் உள்ளனர். மற்றவர்கள் வாடகை வீடுகள் அல்லது குடும்ப வீடுகளுக்கு மாறிவிட்டனர். அவர்களுக்கு அரசு அனுமதித்த வாடகை வழங்கப்படும்.

5 அரசு குடியிருப்புகள் பழுதுபார்க்கப்பட்டு மக்கள் வாழத் தகுந்ததாக மாற்றப்பட்டுள்ளன. அரசால் அடையாளம் காணப்பட்ட 177 வீடுகளின் உரிமையாளர்கள் அவற்றை வாடகைக்கு விட தயாராக உள்ளனர். இவர்களில் 123 பேர் தற்போது வாழ தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 105 வாடகை வீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன.

இறந்த 59 நபர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு SDRF-ல் இருந்து ரூ.4 லட்சம் மற்றும் CMDRF-ல் இருந்து ரூ.2 லட்சம் உட்பட தலா ரூ.6 லட்சம் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது.

691 குடும்பங்களுக்கு அவசர நிதி உதவியாக தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.

இது தவிர, பிரேத பரிசோதனைக்காக 172 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.

இன்னும் 119 பேர் மட்டும் கண்டுபிடிக்கப்பட உள்ளனர்.

91 பேரின் உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.