டெல்லி: மத்தியஅரசி்ன் சில மக்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியின்போது சில பதவிகளுக்கு மட்டுமே நேரடி நியமனம் நடைபெற்றது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கா தெரிவித்து உள்ளார்.

மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயா்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியாா் துறைகளைச் சோ்ந்த வல்லுநா்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்து வருகிறது மோடி தலைமையிலான  மத்திய  அரசு.  அரசின் முடிவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி  கண்டனம் தெரிவித்தாா்.  ஆர்எஸ்எஸ் மூலம் உயர்பதவிகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கிய பதவிகளில் நேரடி சேர்க்கை மூலம் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதால், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு பறிக்கப்படுகிறது.” பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி? – சொல்லப் போனால்… பிரதமர் மோடி “மத்திய குடிமைப் பணிகள் தேர்வு ஆணையம்( யுபிஎஸ்சி) மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படாமல், ஆர்எஸ்எஸ் மூலம் உயர்பதவிகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் மூலம் அரசமைப்பின் மீது நரேந்திர மோடி தாக்குதல் நடத்தி வருகிறார்.”

மேலும் பாஜக கூட்டணி கட்சியைான சிராக் பஸ்வான் கட்சியும் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்  கடந்த கால காங்கிரஸ் ஆட்சியிலும் இதுபோன்ற நியமனங்கள் நடைபெற்றன என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்   காா்கே வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவதற்குப் பதில், மத்திய அரசின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 5.1 லட்சம் பணிகளை பாஜக ஒழித்துவிட்டது . இந்த நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் ஊழியா்களின் எண்ணிக்கை 91 சதவீதம் உயா்ந்துள்ளது. அதேவேளையில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி சமூகத்தினருக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 2022-23-ஆம் ஆண்டுவரை 1.3 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளன.  இந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை தற்போது ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அரசு வழங்கி வருகிறது.

மத்திய அமைச்சகங்களில் வெகுசில பதவிகளுக்கு மட்டும் தேவைகேற்ப நேரடி நியமன முறையை காங்கிரஸ் மேற்கொண்டது. பாஜகவைப் போல் காங்கிரஸ் அனைத்துப் பதவிகளையும் தனியாருக்கு விட்டுக்கொடுத்து இடஒதுக்கீட்டை பறிக்கவில்லை’ என குறிப்பிட்டுள்ளாா்