சென்னை

நேற்று மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆய்வு நடத்தியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசுப் பணியில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுபின்னர், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்றதால்,.

வரும் அக்டோபர் மாதத்துடன் ஷிவ்தாஸ் மீனாவின் பணிக்காலம் நிறைவடைய உள்ளதால் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்று, தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட முருகானந்தம், நேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத்துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

அவருடன் இக்கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர். காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.