சென்னை

சென்னை காவல்துறை வீட்டு வாடகை கொடுக்காத விவகாரத்தில் பிரபல இசையமைப்பாளரிடம் விசாரணையை தொடங்க உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். நேற்று ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,

 “ரூ.20 லட்சம் வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்தார். அவரை போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை. முறைப்படி எந்த தகவலும் அளிக்காமல் யுவன் சங்கர் ராஜா திடீரென வீட்டைக் காலி செய்து விட்டார்.

இந்த தகவல் அருகில் வசிப்பவர்கள் மூலம் தான் எங்களுக்கு தெரியவந்தது.

வீட்டில் உள்ள பொருட்களை யுவன் சங்கர் ராஜா சேதப்படுத்தியுள்ளார். வாடகை பாக்கியை வழங்காததாலும், சேதத்துக்கு நஷ்ட ஈடு தராததாலும் யுவன் சங்கர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என முகமது ஜாவித் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் இந்த புகார் தொடர்பான விசாரணையில் யுவன் வாடகை பாக்கி தர வேண்ட்யது தெரிய வந்துள்ளது. அவ்ர் ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக வாடகையை செலுத்தி வந்த நிலையில், நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள ’The GOAT’ பட ஆடியோ வெளியான பிறகு வாடகையை தருவதாக வீட்டு உரிமையாளரிடம் உறுதியளித்திருப்பது தெரியவந்தது.

திடீரென வீட்டை காலி செய்ய முயன்றதால் யுவன் சங்கர் ராஜா மீது வீட்டு உரிமையாளர் புகார் அளித்ததுள்ளார்.  யுவன் சங்கர் ராஜா சட்டரீதியாக இந்த புகாரை எதிர்கொள்ளப் போவதாக வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார். ஆகவே யுவன் தரப்பு விளக்கத்தை காவல்துறையினர் கேட்க முடிவு செய்துள்ளனர்.