சென்னை

நேற்றுடன் சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிகள் முடிவட்ந்ததல் இன்று முதல் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

“சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் கடந்த
ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தன. தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல்
நடைமேடை இணைப்பு பாதைகள் மற்றும் ரயில்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான
பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும்
வழக்கம் போல் இயக்கப்பட உள்ளன.

கடந்த சில தினங்களாக அந்தியோதயா போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையும் காணப்பட்டது, இந்நிலையில் நேற்று பிற்பகலுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணிகள் நிறைவுற்றதால் இன்று முதல் வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும். சென்னை எழும்பூர் – நெல்லை சந்திப்பு வந்தே பாரத் ரயில் கடந்த மூன்று தினங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும்.

அதேபோல் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய அனைத்து ரயில்களும் வழக்கமான நேரத்தில் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.