மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வரும் அன்வர் இப்ராகிம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

ஆகஸ்ட் 19 முதல் 21 வரை இந்தியா வரும் மலேசிய பிரதமருடன் அவரது அமைச்சரவை சகாக்களும் வர உள்ளனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்தித்து உரையாடவுள்ள பிரதமர் அன்வரை கௌரவிக்கும் விதமாக மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியா – மலேசியா இடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருக்கும் என்று மலேசிய பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.