இந்திய கடலோர காவல்படையின் பொது இயக்குனர் ராகேஷ் பால் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருவதை அடுத்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
https://x.com/rajnathsingh/status/1825193668028006580
ராகேஷ் பால் உடலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Patrikai.com official YouTube Channel