பெங்களூரு

தான் ஆட்சி செய்யாத மாநில  பாஜக ஆளுநர் மூலம்தொல்லை தருவதாக காங்கிரஸ் கூறி உள்ளது.

நேற்று  பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கார்கே

”கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது என்ன காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி சரியாகட் தெரியவில்லை. எனவே அதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு, பதில் அளிக்கிறேன்.

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில், அந்த மாநில அரசுகளுக்கு ஆளுநர்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகம், தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

சித்தராமையா நில முறைகேட்டில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டு என பாஜக தலைவர்கள் கேட்கிறார்கள்,  அதற்கு முன்பு அவர்கள் இதுபற்றி எல்லா விவரங்களும் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது என தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று கூறியுள்ளார்.