டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அகில இந்திய மருத்துவர்கள் சங்கமான ஐஎம்ஏ 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
மருத்துவர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் வகையிலான தீவிர பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
பெண் முதல்வர் மம்தா ஆட்சி செய்து வரும் கொல்கத்தா ஆர்.ஜி மருத்துவமனையில் நடைபெண் பெண் மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொளல அத்துடன் மருத்துவனையும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதை ஒரு கும்பல் செய்தாக முதலில் கூறப்பட்டது. அதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின. ஆனால், அவரை திடீரென அகற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பான ஒரே ஒருவரை மட்டுமே மாநில காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் தயடங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாக நடைபெற்று வருவதாகவும், இதற்கு மருத்துவமனையை சேர்ந்த சிலரும் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெண் டாக்டர் கொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முழு வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இநத் நிலையில், இந்திய மருத்துவ சங்கம் 5 நிபந்தனைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. இதன்படி
◆தற்போது நடந்துபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ‘மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்’ விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்
◆இந்த வழக்கை குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 14 அன்று அத்துமீறி நுழைந்து ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
◆மருத்துவமனை வளாகங்களைப் பாதுகாக்கப்பட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விமான நிலையங்களில் இருக்கும் அளவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்குக் குறைவான பாதுகாப்பை ஏற்க முடியாது. சிசிடிவி கண்கணிப்பை அதிகரித்து, பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
◆உயிரிழந்த பெண் மருத்துவர் வேலை செய்து வந்த 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு சூழலை மேம்படுத்தும் வகையில் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்
◆பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழக்கப்பட்ட கொடுமைக்குக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
இவ்வாறு 5 நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது.