ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில் 3.71 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல் நவம்பர் மாதம் பதவிக்காலம் முடியவுள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெறும்.

இந்த இரு மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.