சென்னை: எம்பாக்ஸ் (Monkey Fox) எனப்படும் குரங்கு அம்மை  வைரஸ் தொற்று தொடர்பாக  தமிழநாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இதைத்தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் மனிதர்களிடம் இருந்து மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது.

இந்த  நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தோல் அரிப்பு ஏற்படும்.

2 வாரம் முதல்  4 வாரம் வரை காய்ச்சல், தலைவலி , முதுகு வலி, உடல் சோர்வு ஆகியவை காணப்படும்.

இதுவே குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘குரங்கு அம்மை’ தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை! பொதுசுகாதாரத்துறை தகவல்