மதுரை:  திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட  1.53 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட   ரூ. 4.56 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் போதைபொருள் கடத்தல் நடவடிக்கை அதிகரித்து காணப்படும் நிலையில், தற்போது தங்கம் கடத்தலும் அதிகரித்து வருகின்றன.  இன்று காலை,
( 13.08.2024 )  திருச்சி விமான நிலையத்தில் வந்திறிங்கிய பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், கடத்தல் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, கோலாம்பூரில் இருந்து வந்த பெண் சுங்க வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சுங்கத் துறைக்கு அறிவிக்காமல்  தங்க நகைகளை கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில்  ரூ.24 காரட் மற்றும் 22 காரட் தூய்மையான 2291 கிராம் தங்கப் பொருட்கள் அதாவது சுமார் 1.53 கோடி ரூபா்ய மதி்பிபலான   நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  அவரது பாஸ்போர்ட் சரிபார்ப்பில் அவர் தங்கம் இறக்குமதி செய்ய தகுதியான பயணி இல்லை என்பதும் தெரியவந்தது.  பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.56 கோடி மதிப்பிலான 6.60 கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு, கார்மூலம் எடுத்து வந்த நிலையில், அவர்களை மடக்கி காவல்துறையினர் கைது செய்தனர்.  இதன் மதிப்பு ரூ. 4.56 கோடி என கூறப்படுகிறது.

கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இலங்கையில் இருந்து கடத்தல் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் சோதனை நடத்தினர். இந்த தீவிர சோதனையில் சந்தேக விதமாக வந்த காரை நிறுத்தியதில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ 600 கிராம் மதிப்பிலான கடத்தல் தங்கம் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.