டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
3வது முறையாக மத்தியில் ஆட்சி ஏற்றுள்ள பாஜக அரசு, வக்பு சட்டம் உள்பட பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது. மேலும் வங்கதேச கலவரம் மற்றும், பங்குசந்தை ஊழல் தொடர்பான ஹிண்டன்பெர்க் அறிக்கை போன்றவை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இநத் நிலையில், டெல்லியில் உள்ள அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே தலைமையில் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைத்து பொது செயலாளர்கள், பிசிசி தலைவர் மற்றும் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் ஆகியோருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் லோக்சபா தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.