சென்னை

சென்னை தலைமைச் செயலக பகுதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது/

வரும் 15 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நாட்டின் 77-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

இதைப் போல் சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுகிறார். தமிழகம் முழுவதும் சுதந்திர தின விழாவையொட்டி ஒரு லட்சம் காவல்துறையிஅர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் இதில். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகம் பகுதி சுதந்திர தினத்தையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 ,மற்று 15 ஆகிய இரு நாட்கள் முதல்-அமைச்சரின் இல்லம் முதல் தலைமைச் செயலகம் வரை செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,

எனவே இங்கு டிரோன், ஏர் பலூன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தின விழா நெருங்க, நெருங்க பாதுகாப்பு கெடுபிடி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.