அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்

திருவிழா:

தினமும் ராகுகால பூஜை நடப்பது விசேஷ அம்சம். புரட்டாசி மாதம் பூர நட்சத்திரத்தில் சுமங்கலி ஆராதனை நடக்கிறது.

சுமங்கலிகள் இந்நாளில் வழிபட்டு மாங்கல்ய பலம் பெறலாம். ஆடி கடைசி வெள்ளியன்று திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படும்.

மகாமகத்தன்று காமாட்சி அம்பிகை மட்டும் இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வாள்.

தல சிறப்பு:

இந்த மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கிறது.

பொது தகவல்:

சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கிருக்கும் காளிகா பரமேஸ்வரி சன்னதியிலேயே கூட்டம் அலைமோதுகிறது.

ராஜகணபதியை வணங்கிவிட்டு ராகு காலத்தில் காளிகா பரமேஸ்வரிக்கு பூஜை செய்ய வேண்டும். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக கன்னிகாபரமேஸ்வரி வீற்றிருக்கிறாள். கத்தி, கேடயம் ஆகியவை கைகளில் உள்ளன.

காளிகா பரமேஸ்வரியின் சன்னதி முன்பு அஷ்டலட்சுமி மண்டபம் இருக்கிறது. அம்பாள் ருத்திராம்சம் பொருந்தியவள் என்பதால் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது. விஸ்வகர்ம சமுதாய மக்களின் பராமரிப்பில் இக்கோயில் இருக்கிறது.

பிரார்த்தனை:

கன்னிப்பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை வேண்டிக் கொண்டால் நல்ல வரன் அமையும்.

தலபெருமை:

ராகுகால பூஜை முதன்முதலாக ஆரம்பிக்கப்பெற்ற பெருமை இந்த கோயிலைத்தான் சாரும்.

தல வரலாறு:

விஸ்வகர்ம சமுதாய மக்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

ஸ்தபதிகளின் குலதெய்வம் காமாட்சி. அவர்கள் ஒரு கோயில்கட்டுமான பணியை ஆரம்பிக்கும்போது காளி படத்தை வரைந்தேஆரம்பிப்பார்கள்.

அனேகமாக கும்பகோணத்தில் உள்ள கோயில்களை கட்ட துவங்கும்போது காளியை பிரதிஷ்டை செய்துவிட்டு இப்பணியை தொடங்கியிருக்கலாம் என தெரிகிறது.

இந்தக்கோயிலில் ஏகாம்பரேஸ்வரரையும் தங்கள் குலதெய்வமான காமாட்சியையும் பிரதிஷ்டைசெய்தனர்.

இங்கு ஏகாம்பரேஸ்வரரைவிட காமாட்சிக்கே அதிக மரியாதை. எனவே காமாட்சி மட்டுமே இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வாள்.

சிறப்பம்சம்:

இந்த மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கிறது.

அமைவிடம்:

கும்பகோணம் நாகேஸ்வரம் கீழவீதியில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.