சிம்லா

னமழை மற்றும் நிலச்சரிவால் இமாசலப் பிரதேசத்தில்  100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலம் முழுவதும் 128 சாலைகள் மூடப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 9 வரை மழை தொடர்பான சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை முதல் இமாச்சலப் பிரதேசத்தில் நஹன் (சிர்மவுர்) பகுதியில் 168.3 மிமீ மழையும்.சந்தோலில் 106.4 மிமீ, நக்ரோட்டா சூரியனில் 93.2 மிமீ, தவுலகுவானில் 67 மிமீ, ஜப்பர்ஹட்டியில் 53.2 மிமீ மற்றும் கந்தகஹட்டியில் 45.6 மிமீ மழையு, பெய்துள்ளது.

கனமழை காரணமாக 44 மின்சாரம் மற்றும் 67 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளணா. மண்டி, சிர்மூர், சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் வெள்ள அபாயம் இருக்கும் என்றும் வானிலைத் துறை எச்சரித்துள்ளது., ஹமிர்பூர் மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ஹமிர்பூர் துணை ஆணையர் அமர்ஜித் சிங், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 9 வரை இமாச்சலப் பிரதேசத்தில் மழை மற்றும் நிலசரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்த காலகட்டத்தில் சுமார் ரூ.842 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்., இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 16 வரை கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையை மாநில வானிலை மையம் வெளியிட்டுள்ளது.