டெல்லி
தமிழகத்தை சேர்ந்த டி வி சோமநாதன் மத்திய அமைச்சரவையின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம்ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆ0ம் தேதி முதல் மத்திய அமைச்சரவையின் செயலாளராக ராஜீவ் கவுபா மத்திய மந்திரிசபை செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ராஜீவ் கவுபாவின் பதவி காலம் வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே மத்திய மந்திரி சபையின் புதிய செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் தற்போது மத்திய நிதி மற்றும் செலவீன துறை செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
30ம் தேதி முதல் மத்திய மந்திரி சபை செயலாளராகும் டி.வி.சோமநாதன் அடுத்த 2 ஆண்டுகள் (30.8.2026 வரை) மத்திய மந்திரி சபை செயலாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு அடுத்து மிகவும் அதிகாரம் மிக்க பதவியாக மத்திய மந்திரி சபையின் செயலாளர் பதவி உள்ளது.
மத்திய அமைச்சரவையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.வி. சோமநாதன், தமிழக அரசின் தலைமை செயலாளராகவும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிர்வாக இயக்குனராகவும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.