சென்னை: மெட்ரோ ரயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை மயிலாப்பூரில், தரைக்கு கீழே 3 தளங்களுடன் 115 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டு வரும் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் குறித்த கிராபிக் காட்சிகள் வெளியாகி உள்ளது. இது சென்னையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையிலேயே அதிக பட்சமாக ஆழத்தில் அமைக்கப்பட ள்ளது.

 சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஒரு கான்கோர்ஸ் மற்றும் மூன்று பிளாட்பாரங்கள் மற்றும் நான்கு  வாசகர்களை இணைக்கும் வகையில் மயிலாப்பூரில் பூமிக்கு அடியில் 115 அடியில், திருமயிலை மெட்ரோ நிலையம் அமைக்கப்படஉள்ளது.  நான்கு நிலைகளுடன் அமையும் இந்த மெட்ரோ ரயில் நிலையம், வரும்   2028 இல் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக  கிராபிக்ஸ் காட்சிகளை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இது காண்போரை ஆச்சரியம்  அடைய வைத்துள்ளது.

சென்னையில் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 116 கிமீ தொலைவுக்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மயிலாப்பூரில் கட்டப்படும் மெட்ரோ நிலையம், மற்ற நிலையங்களை காட்டிலும் ஆழமாகவும் பரந்த பொது தளத்தோடும் உருவாகி வருகிறது. பொது தளம், வணிக வளாகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது.

இந்த திருமயிலை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் (தரையிலிருந்து 55 அடி ஆழத்தில்) மாதவரம்-சிறுசேரி சிப்காட் செல்லும் மேல்தளப்பாதை ரயில்கள் இயக்கப்படும்.

2ம் தளத்தில் (78 அடியில்) கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி செல்லும் ரயில்கள் இயக்கப்படும்.

3ம் தளத்தில் (115 அடியில்) மாதவரம்-சிப்காட் செல்லும் கீழ்ப்பாதை ரயில்களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கியது: மாதவரம் முதல் சிப்காட் (நடைபாதை-3), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி (வழிச்சாலை-44), மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (வழிச்சாலை-5). திருமயிலை நிலையம் காரிடார்-3 மற்றும் காரிடார்-4க்கான சந்திப்பாக செயல்படும். 118.1 கிமீ நீளம் கொண்ட இந்த திட்டத்திற்கு தோராயமாக ரூ.61,843 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமயிலை நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் வழங்கப்பட்டது. சாலையின் இடம் குறுகியதாகவும், புவியியல் சூழ்நிலையும் சவாலானதாகவும் இருப்பதால், இது கடினமான பணி என்று CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமயிலை நிலையம் 4,854.4 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் மற்றும் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ்) நிலையத்தையும் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) பேருந்து நிலையத்தையும் இணைக்கும். இது மயிலாப்பூரில் லஸ் மற்றும் கேனால் பேங்க் சாலை சந்திப்பின் அடியில் அமைந்துள்ளது.

திருமயிலை நிலையம், இரண்டாம் கட்டத்தின் மற்ற நிலையங்களிலிருந்து வேறுபடும், ஏனெனில் இரண்டு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கு பதிலாக ஐந்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் இருக்கும்.

மயிலாப்பூரில் நிலத்தின் பரப்பு குறுகியதாக இருப்பதால் குண்டு தளங்கள் அமைக்க வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைய 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என கனிந்துள்ள அதிகாரிகள், மண் பரிசோதனைக்கு பிறகு, திருமயிலையில் பாறைகளும் மணலுமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினர்.  மெட்ரோ கட்டுமானத்திற்காக ஆழம் தோண்டுவது, சுரங்கம் அமைப்பது, வெளிசுவர் கட்டுவது போன்றவற்றில் பல்வேறு சவால்கள் நிறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ: நன்றி சன் டிவி