சென்னை: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்  இருந்து அவர்களை விடுவித்த மாவட்ட நீதிமன்றம் உத்தரவை சென்னை உயர்நீதிமனற்ம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை  ஆகஸ்ட் 11ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,   சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த மாவட்ட  நீதிமன்றங்களின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளார். இதனால், அவர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தது. மறைந்த கருணாநிதி அப்போது முதலமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனும் இருந்தனர்.

இதையடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீதும் அவரது மனைவி மணிமேகலை மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.

அதேபோல் கே.கே.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் மீதும் அவரது மனைவி ஆதிலட்சுமி மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாவிட்டாலும் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்தார். இதையடுத்து இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்து விசாரணையை தொடங்கினார்.

விசாரணையின்போது அமைச்சர்கள் இருவரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும் ஆதாரங்களை புறந்தள்ளிவிட்டு விசாரணையை நடத்துவது எப்படி நியாயம் எனவும் வாதிடப்பட்டது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில் முதலில் விசாரித்த விசாரணை அதிகாரி ஆவணங்களை கவனிக்க தவறிவிட்டார் எனவும் பின்னர் வந்தவர் ஆவணங்கள் சரியாக இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் தங்கம் தென்னரசு சார்பில், ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், ஆதாரங்களைப் புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வதை நியாயமான விசாரணையாகக் கருத முடியாது. வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கைப் பரிசீலித்திருக்க வேண்டும். மேல் விசாரணைக்குப் பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு முழு அதிகாரமும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதில்: மேல் விசாரணையில் அமைச்சருக்கு எதிராக எந்த ஆவணங்களும் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். காரணங்கள் சரியாக இருந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணை அதிகாரியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.  விசாரணையின்போது,   தங்கம் தென்னரசு வழக்கில் ஆஜரான விசாரணை அதிகாரியான பூமிநாதனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அதில், எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு 7 ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளைப் புலன் விசாரணை செய்து வருவதாக புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார்.

திமுக ஆட்சியில் தங்கம் தென்னரசுவை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த நீங்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சரமாரியாக கேள்விகளை எழுப்பி கடந்த ஜூன் 16ஆம் தேதி அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த இரு வழக்குகளுக்கும் இன்று (ஆகஸ்ட் 7) தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்  பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார். திமுக அமைச்சர்களை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை  ரத்து செய்து  தீர்ப்பு வழங்கி  உள்ளார். மேலும் அவர்கள்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கின் விசாரணைக்காக செப்டம்பர் மாதம் 9ந்தேதி இரு அமைச்சர்களும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணை தொடங்கும்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி