சென்னை: சென்னையில் விடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் கட்டணம் 112 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி,  வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதி கட்டணம் உயர்த்தப்படவில்லை என்ற கூறி ள்ளது.

சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம்  செய்வது வருகின்றன. இதையடுத்து,  சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்தியில், ‘கட்டட அனுமதி கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.100 வசூலிக்கப்படும். ( அதாவது ஆயிரம் சதுர அடி வீடு கட்ட ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்) இத்திட்டம் தனிவீடு கட்டும் நோக்கத்திற்கு வழிவகை செய்யும் வகையில் அமைந்துள்ளது. வணிக நோக்கத்தோடு கட்டுபவா்களுக்காக கொண்டுவரப்படவில்லை.

இதன்படி, கட்டட அனுமதி கோரும் போது, வளா்ச்சி கட்டணம் ரூ.15, கட்டட அனுமதி ரூ.600, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலநிதி கட்டணம் ரூ.267, சாலைவெட்டு சீா் செய்யும் கட்டணம் ரூ.197 என சதுர மீட்டருக்கு ரூ.1,076 வசூலிக்கப்படும்.

இதற்கு முன்பு அனுமதி அளிக்கும் போது சதுர அடிக்கு ரூ.99.70 வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டடங்களுக்கான இணைய வழி அனுமதி கட்டணம் சற்று அதிகமாக இருந்ததை அரசு கவனத்தில் கொண்டு, அந்தக் கட்டணத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி எளிய முறையில் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறலாம்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்வு! அண்ணாமலை கண்டனம்…

ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? கட்டிட அனுமதி கட்டண உயர்வுக்கு ராமதாஸ் கண்டனம்..