சென்னை

ன்று தமிழகத்தில் 17 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இன்று 17 ஐ பி எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில்,

  • தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதிலாக  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி ஆர்.தினகரன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
  • தலைமை காவல் படைப்பிரிவின் ஐஜியாக இருந்த டி.செந்தில் குமார் மேற்கு மண்டல ஐஜியாக நியமனம்.
  • மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி, தலைமை காவல் படைப்பிரிவு ஐஜியாக நியமனம்.
  • தலைமை காவல் படைப்பிரிவு ஐஜி ரூபேஷ் குமார் மீனா, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமனம்.
  • நுண்ணறிவு பிரிவு ஐஜி டாக்டர் மஹேந்திர குமார் ரத்தோட் , சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கு இடமாற்றம்.
  • சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் ஐஜி டாக்டர் பி.சாமுண்டீஸ்வரி , காவல் தலைமை பிரிவின் ஐஜியாக நியமனம்.
  • குற்றப்பிரிவு ஐஜி ஏ.ராதிகா, மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக நியமனம்.
  • மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த டாக்டர் பி.கே.செந்தில் குமாரி , குற்றப்பிரிவு ஐஜியாக இடமாற்றம்.
  • காவல் நல்வாழ்வு பிரிவின் ஐஜி நஜுமல் ஹோடா, காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக இடமாற்றம்.
  • திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த டாக்டர் பா.மூர்த்தி திருநெல்வேலி டிஐஜியாக நியமனம்.
  • திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த ப்ரவேஷ் குமார் , பெருநகர சென்னை மாநகர வடக்கு பிரிவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம்.
  • பெருநகர சென்னை மாநகர வடக்கு பிரிவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த அபிஷேக் தீக்‌ஷித் ரயில்வே காவல் பிரிவின் டிஐஜியாக நியமனம்.
  • திண்டுக்கல் சரக டிஐஜி டாக்டர் அபினவ் குமார் ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமனம்.
  • ராமநாதபுரம் சரக டிஐஜி எம்.துரை ஐபிஎஸ், காவல் மற்றும் நல்வாழ்வுத்துறைக்கு இடமாற்றம்.
  • சென்னை போக்குவரத்து காவல்துறையின் இணை ஆணையர் என்.தேவராணி , வேலூர் சரக டிஐஜியாக நியமனம்.
  • வேலூர் சரக டிஐஜி சரோஜ் குமார் தாகூர் , சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமனம்.’

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.