வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் 80க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

முண்டக்கை பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள் சேதமான நிலையில் அங்கு தோண்ட தோண்ட பள்ளி புத்தகங்களும் புத்தக பைகளும் ஏராளமாக குவிந்துவருகிறது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டுக்கு முன் இதே பள்ளி மைதானத்தில் ஆசிரியையுடன் சைக்கிளில் விளையாடி மகிழ்ந்த மாணவிகளின் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

https://x.com/AK09121977/status/1818859405430960130

ஓராண்டுக்கு முன் பள்ளி வளாகத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்த இந்த சிறுவர்களில் பலர் தற்போது நிலச்சரிவில் பலியாகி இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.