திருநெல்வேலி

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே ஆன வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்பட்டுளது.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை வந்தடைகிறது. தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரெயில்வே இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.

“திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06030) இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06029) இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) திங்கட்கிழமைகளில் மட்டும் இயங்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.”

என்று கூறப்பட்டுள்ளது.