மேட்டூர்

ர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,70/ 870 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தீவிரமாக பெய்து வருகிறது.  என்வே அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது.  ஆகவே தமிழக்த்தில் மேட்டூர் அணையின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து,  அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

மேட்டூர் அணை 120 அடியை முழு கொள்ளளவாக கொண்டுள்ள நிலையில், தற்போது நீர் இருப்பு 93.47 டி.எம்.சி யை எட்டி உள்ளது. ,மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கன அடியிலிருந்து 1,70,870 கன அடியாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500கன அடி நீஎ வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் ச்ணையில் இருந்த் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் அப்படியே திறக்கப்படுவதால்டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், நீர்நிலைகள் அருகில் யாரும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.