சோழிங்கநல்லூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழைய மகாபலிபுரம் சாலையின் (ஓஎம்ஆர்) முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக மாற உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இன்டர்சேஞ்ச் நிலையமாக சோழிங்கநல்லூர் அமையவுள்ளது.
மாதவரம் மில்க் காலனி முதல் – சிறுசேரி வரையிலான 3வது வழித்தடம் மற்றும் மாதவரம் மில்க் காலனி முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் ஆகியவை செயல்பாட்டுக்கு வரும் போது கந்தன்சாவடியை அடுத்த நேரு நகர் முதல் சிறுசேரி வரையில் OMRல் உள்ள IT காரிடார் ஒருங்கிணைக்கப்படும்.
சோழிங்கநல்லூர், நாவலூர், அடையாறு, பெரும்பாக்கம் வழியாக மேடவாக்கம் மற்றும் கலைஞர் கருணாநிதி சாலை வழியாக ஈசிஆர் செல்லும் பரபரப்பான சந்திப்பில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைய உள்ளதை அடுத்து இந்தப் பகுதியில் இருந்து சென்னையின் மையப் பகுதிகளுக்கு செல்வது எளிதாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரப்பாக்கம், மேடவாக்கம், செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு வசதியாகவும் அதே நேரத்தில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மெட்ரோ வழித்தடத்தின் கீழ் கிரேட் செப்பரேட்டர் அமைக்கப்பட உள்ளது.
தவிர, எதிர்காலத்தில் சோழிங்கநல்லூரை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழைய மகாபலிபுரம் சாலையின் முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக சோழிங்கநல்லூர் உருவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.