சென்னை

ரும் ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கல்விக்கான க்கலந்தாய்வு தொடங்க உள்ளது.

அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்வி இடங்களில் வழங்கப்படும் 15 சதவீத இடங்கள், எய்ம்ஸ் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மா், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கு எம்சிசி கலந்தாய்வு நடத்தும்., இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது.

தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) செயலா் பி.ஸ்ரீநிவாஸ் இது குறித்து,

”ஆகஸ்ட் 14 முதல் 23 வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது செப்டம்பர் 5 .2ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்கி செப்டம்பர்13ஆம் தேதி வரை நடைபெறும்.  பிறகு செப்டம்பர் . 26 முதல் அக்டோபர் .5 வரை 3ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும்

அத்துடன் 21,000 பல் மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தொடா்பான புதிய தகவல்களுக்கு எம்சிசி வலைதளத்தை அணுகுமாறு மாணவா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது”

என்று தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்ட பின்னா், தோ்வின் இறுதி முடிவுகளை கடந்த வெள்ளிக்கிழமை தேசிய தோ்வு முகமை அறிவித்தது. இதைத் தொடா்ந்து, கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.