தென்காசி

டும் வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது.

தற்போது குற்றாலத்தில் சீசன் மிகவும் நன்றாக உள்ளது.  ஆனால் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மேலும் குளிர்ந்த காற்றும் வேகமாக வீசி வருவதுடன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

தொடர்ந்து நேற்று இரவிலும் பரவலாக மழை பெய்ததால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவல்துறையினர் அங்கு குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றி அந்த அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.