சென்னை
இன்று சென்னை கடற்கரை – எழும்புர் இடையே ஆன ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”இன்று காலை 7 45 மணி முதல் இரவு 7 45 மணி வரையில் சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும் இன்று காலை 7 45 மணி முதல் இரவு 7.45 வரையில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் அனைத்து மின்சார ரயில்களும் அதற்கு மாற்றாக சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும்.”
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel