சென்னை: டிஎன்பிஎல் (Tamil nadu Premier Leak) போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காததால் இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாகனப் போக்குவரத்து மிகுந்த சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ். இவரது மகன் சாமுவேல் ராஜ் (வயது 23). இவர் கிரிக்கெட் விளையாட்டு வீரர். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, டிஎன்பிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சித்து வந்தார். இதில் வாய்ப்பு கிடைத்தால் தனது திறமையை நிரூபிக்கலாம் என்றும், பின்னர் மற்ற ட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்றும், விரைவில் ஐபிஎல் போட்டிகளிலும் இணைய முடியும் என ஆவலுடன் காத்திருந்தார்.
மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் டிஎன்பிஎல் எனப்படும் ‘தமிழ்நாடு பிரிமியர் லீக்’ போட்டியில் தேர்வாவதற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை. இருந்தாலும், ஒருபுறம் மன வருத்ததிலும், மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியும் அளிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்ட சாமுவேல் ராஜ், கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர், கத்திப்பாரா மேம்பாலத்தில், போரூர் வழியாக செல்லும் வளைவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, பாலத்தில் மேல் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சாமுவேல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சாமுவேல் ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டனர்.
விசாரணையில், டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்படாததால்,க டுமையான மன உளைச்சலில் இருந்து வந்த சாமுல்வேராஜ், நேற்று காலை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு வீடு திரும்பும் போது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.