சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராமதாசுக்கு கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ,மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
, ராமதாசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கதில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் தனது எக்ஸ் தள பதிவில்,
”பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.”
என்று வாழ்த்தியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel