பெங்களூரு

நேற்று இரவு முதல் எதிர்க்கட்சி எம் எல் ஏ க்கள் கர்நாடக சட்டசபையில் விடிய விடிய தர்ணா நடத்தி உள்ளனர்.

கடந்த 15-ந் தேதி தொடங்கியகர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின்ன். முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு வால்மீகி வளர்ச்சி வாரிய நிதி முறைகேடு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தொடரின் 7-வது நாளான நேற்று காலை. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (மூடா) முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ள விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சபாநாயகர் யு.டி.காதர்,

“வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதனால் அதுபற்றி நான் விவாதிக்க அனுமதி அளித்தேன். இன்னும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி அளித்தேன். இது பழைய விவகாரம். அதனால் மூடா விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க முடியாது. பா.ஜனதா கொண்டு வந்துள்ள இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்கிறேன். வேறு எந்த வடிவத்திலும் இதுகுறித்து விவாதிக்க அனுமதி அளிக்க முடியாது”

என்று அறிவித்தார்.

இதையொட்di நேற்றிரவு பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினா்கள் சட்டசபை அரங்கிலேயே படுத்து தூங்கினர். அவர்களுக்கு அங்கேயே உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மேல்-சபையிலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர்கள் தூங்க வசதியாக படுக்கை, தலையணை, போர்வைகள் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட்டன. இரவிலும் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டாகியுள்ளது.