சிம்லா

ங்கணா ரணாவத் தேர்தல் வெற்றியை எதிர்த்து இமச்சல பிரதேச உயரீதிமன்றத்தில் வழக்கு மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருட மக்களவை தேர்தலில் இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட லாயிக் ராம் நேகி என்பவர் இமாசல பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

மனுவில் இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான நேகி, வேட்பு மனுவில் தேவையான விசயங்களை பூர்த்தி செய்த பின்னரும், தேர்தலுக்கு முன்பே தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 100-ன் கீழ், இந்த தேர்தலில் கங்கனா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கும்படி மனுவில் கோரியிருக்கிறார்.

அவருடைய வேட்பு மனு சட்டவிரோத வகையில் நிராகரிக்கப்பட்டது என நேகி நிரூபிக்க தவறினால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் சூழல் உள்ளது. ஆகஸ்டு 21 ஆம் தேதிக்குள் இந்த மனு மீது பதிலளிக்கும்படி பா.ஜ.க. எம்.பி. கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என நேகியின் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.