டெல்லி
தமிழக நீர்வள்த்துறை தலைமை செயலர் கனமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை கர்நாடகா எதிர்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் செய்தியாளர்களிடம்,
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீரை மாதந்தோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தினோம். இதனை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை கர்நாடகா எதிர்க்கவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 45 டி.எம்.சி தண்ணீர் திறக்க தமிழகம் தரப்பில் வலியுறுத்தினோம். ஜூலை 30-ந்தேதி நடைபெறும் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கு 45 டி.எம்.சி தண்ணீர் திறப்பது குறித்து அப்போது முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.”
என்று தெரிவித்துள்ளார்.