சென்னை
பிரதமர் மோடி தம்மை தோற்கடித்தோரை பழி வாங்குவதில் குறியாக இருக்க கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்ற் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
” தேர்தல் முடிந்துவிட்டதால் இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.
ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்”
என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel