டெல்லி: நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட்.

மத்திய பட்ஜெட் 2024-25ல் வெளியிடப்பட்டுள்ள  முக்கிய அம்சங்கள் கீழே இடம்பெற்றுள்ளன.

 செல்ஃபோன்களுக்கான் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.  இந்நிலையில், செல்போன், செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதமாக மத்திய அரசு குறைப்பதாக அறிவித்துள்ளது.

வருமான வரி தொடர்பான அறிவிப்புகள்:

தனி நபர் வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை. தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்‌ஷன்) ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு.

தனி நபர்களுக்கான வருவாயில், ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை . ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள்.

வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.

டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.

முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது.

நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. டிடிஎஸ் தாக்கல் தாமதம் இனி கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது.

வரிச் சலுகைகள்: 

புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடமிருந்து நிதி கோரினால், ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது ரத்து செய்யப்படுகிறது.

வரிகள் சார்ந்த அறிவிப்புகள்: 

பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.

  • ஆன்லைன் வர்த்தகத்துக்கான வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
  • குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீத குறுகிய கால மூலதன ஆதாய வரி. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைபு. இதுவரை 40 சதவீதமாக இருந்த வரி இனி 34 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

இதன் காரணமாக,  வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மின் ஆலை மற்றும் வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ.32,900 கோடி
பீகார் மாநிலத்தில் மின் ஆலை அமைக்க ரூ.21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

தனி நபர் வருமான வரி விவரம்

  • தனிநபர் வருமான வரி 0-3 லட்சம் வரை வரி கிடையாது
  • தனிநபர் வருமான வரி 3-7 லட்சம் வரை 5% வரி
  • தனிநபர் வருமான வரி 7-10 லட்சம் வரை 10% வரி
  • தனிநபர் வருமான வரி 10-12 லட்சம் வரை 15% வரி
  • தனிநபர் வருமான வரி 12-15 லட்சம் வரை 20% வரி
  • தனிநபர் வருமான வரி 15 லட்சத்துக்கு மேல் 30% வரி
  • நிரந்தரக் கழிவுக்கான வரம்பு வரிப் பிடித்தம் அளவு 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்வு