டெல்லி: நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள் கீழே இடம்பெற்றுள்ளன.

தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.


வரிகள் சார்ந்த அறிவிப்புகள்:

பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.

வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.

டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.

முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது.

பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

நாட்டின் எந்தெந்த மாநிலங்களில் அதிக பத்திரப்பதிவு நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க வலியுறுத்தப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்

பழங்குடியின மக்களுக்காக ரூ.5 கோடி
பழங்குடியின மக்களுக்காக ரூ.5 கோடியில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்

30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

100 சாலையோர உணவு மையங்களை 

அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்களை உருவாக்கப்படும்.

1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்

பிரதமரின் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli ) திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

அசாம் மாநிலத்தில் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு.

பிரதமரின் கிராம சாலை திட்டம் 4-ன் கீழ் எல்லா காலநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 25,000 கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.

விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1,000 கோடி மூலதன நிதியாக வைக்கப்படும்.