டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 7வது முறையாக மத்திய முழு  நிதி நிலையை அறிக்கையை  நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

மோடி தலைமையிலான அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசிக்கும் வகையில்  உள்ளது, அது தொடரும் என்றார்.

தொடர்ந்து   முக்கியமாக  4 முக்கிய கவனம் புள்ளிகளை  நிதியமைச்சர் நிர்மலா  வலியுறுத்தினார். அதன்படி,  ‘கரீப்’ (ஏழை), ‘யுவா’ (இளைஞர்), ‘அன்னதாதா’ (விவசாயி) மற்றும் ‘நாரி’ (பெண்கள்) உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

சர்வதேச பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. ஆனால்,  இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது

வேலைவாய்ப்பு, கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.

  • 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான 5 திட்டங்களுக்கு இரண்டு லட்சம் கோடி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு, திறன், எஸ்.எம்.இ-க்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது கவனம் செலுத்தப்படும் என்றார்  நிர்மலா சீதாராமன்

80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளது. 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம். வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமரின் கரீப் யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடி பேர் பயன்

வறுமை ஒழிப்பு திட்டமான பிரதமரின் கரீப் யோஜனா திட்டத்தின் மூலம் 80கோடி பேர் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடன்

உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.