பெங்களுரு

ன்று கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

நேற்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்பட அனைத்து ஆமைச்சர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, ‘நீட் தேர்வு விவகாரம்’, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வது’ உள்பட 17 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது நீட் தேர்வு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதிகள் மறுவரையறை ஆகிய 3 விஷயங்களுக்கு எதிராகவும் சட்டசபை தீர்மானம் நிறைவேற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.

இந்த 3 தீர்மானங்களும் இன்று  சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபையில் தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.