நீலகிரி
கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்டம் 4 தாலுகாkகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கோத்தகிரி, குன்னூர், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருவதுடன் பலத்த காற்று வீசி வருகிறது.
எனவே கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நீலகிரியில் உள்ள 4 தாலுகா (உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி) பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே நீலகிரியில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
[youtube-feed feed=1]