சென்னை:  தென்மாவட்ட ரயில்கள் நாளை முதல் 10 நாட்களுக்கு சென்னைக்குள் வராது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதுபோல தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதியா ரயில் சேவையும் தற்காலைகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.எங்கு நிறுத்தப்படும்? என்ன காரணம்?

தாம்பரம் ரயில் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தென்மாவட்ட ரயில்கள் நாளை (ஜூலை 22 ) முதல் அதாவது நாளை முதல் ஜூலை 31 வரை 10 நாட்கள்  சென்னைக்கு வராது என்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் சிக்னல் மேம்படுத்தல் மற்றும் யார்டு ரெட்மாடலிங் பணிகள் காரணமாக ரயில் இயக்கங்களில் பெரிய மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாகர்கோவில்,. தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் கிட்டத்தட்ட 20 ரயில்கள் சென்னை கடற்கரை அல்லது சென்னை எழும்பூர் அல்லது விழுப்புரத்திற்கு திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23 முதல் 31 வரை மதுரை மற்றும் திருச்சிக்கு வைகை மற்றும் ராக்ஃபோர்ட் விரைவு ரயில்கள் எழும்பூருக்குப் பதிலாக செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் காரைக்குடியில் இருந்து எழும்பூர் செல்லும் பல்லவன் விரைவு ரயில் செங்கல்பட்டில் குறுகிய நேரமாக நிறுத்தப்படும்.

ஜூலை 22, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதிகளில் செங்கோட்டை-தாம்பரம் விரைவுப் பயணங்கள் விழுப்புரத்தில் குறுகிய நேரமும், தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் ஜூலை 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும்.

ஜசிதிஹ்-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஜூலை 31 வரை எழும்பூரில் இருந்து இரு திசைகளிலும் இயக்கப்படும்.

தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

எழும்பூர் – மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்போர்ட் விரைவு ரயில்,  காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

தாம்பரம் -செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 22, 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில்  விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.

மங்களூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்பட்டு மங்களூர் சென்றடையும்.

எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு கூறி உள்ளது.

யார்டு சீரமைப்புப் பணிகள் காரணமாக, பராமரிப்புக் காலத்தில் (ஜூலை 23 முதல் மறுவடிவமைப்புப் பணிகள் முடியும் வரை) தாம்பரம் வழியாக செல்லும் சில ரயில்களின் சேவையில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.