சென்னை: அடுத்த 14 நாட்களுக்கு மழை நிற்காது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் இதன் காரணமாக, சென்னை + நீலகிரி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கும் என்றும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.  இதனால் மேட்டூர் அணைக்கு நல்ல நீர்வரத்து இருக்கப் போகிறது.. என்று  கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகள் உள்பட பல ஏரிகள் நிரம்பி வருகின்றன.  மேலும் காவிரியிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி உள்பட பல பகுதிகளில்  அடுத்த 10- 14 நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை மேகங்கள் உருவாகும் என்றும்,  “காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அடுத்த 10- 14 நாட்களுக்கு மழை நிற்காது.. மேட்டூர் அணைக்கு நல்ல நீர்வரத்து இருக்கப் போகிறது..

தலைகாவிரியில் இன்று 230 மி.மீ மழை பெய்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் கேஆர்எஸ் அணை திறக்கப்படும். அடுத்த வாரத்தில் கர்நாடக அணையில் இருந்து மேட்டூருக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

நீலகிரி (அவலஞ்சி- பந்தலூர்- தேவாலா-போர்த்திமுண்ட்- அப்பர்பவானி- பார்சன்ஸ் பள்ளத்தாக்கு) மற்றும் வால்பாறையில் கனமழை தொடரும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மாலை நேரங்களில் வேகமாக நகரும் மழை மேகங்கள் உருவாகும்..

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகளில் இனிமையான வானிலை தொடரும். இந்த சில் வானிலையை என்ஜாய் செய்யவும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்கத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – நீலகிரியில் 4 தாலுகாக்களுக்கு விடுமுறை