சென்னை:   தமிழ்நாட்டில் இன்று சென்னை ள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிக மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காக்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று  சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொட்ட போகுது என   வானிலை மையம்  தெரிவித்து உள்ளது.  நேற்று முதலே  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இந்த நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.

அதன்படி,  சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூரில் மழை பெய்யலம். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்தில் கொட்டும் மழை காரணமாக,  4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று படுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  தொடர் கனமழை காரணமாக, உதகை, குத்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை  வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரியின் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. புதுச்சேரி மாஹேவில் கல்வி நிறுவனங்களுக்கும் லீவ் சென்னை கிளைமேட்: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.