டெல்லி

ன்று சவுக்கு சங்கர் கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

பெண் காவல்துறையினரை பற்றி அவதூறு பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த அனுவில்ல், ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். என்றும் தனது மகன் சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

கடந்த 15-ம் தேதி இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஏ.அமானுல்லா அடங்கிய அமர்வு விசாரித்தபோது சவுக்கு சங்கரால் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?, குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன்?, பொது அமைதி எங்கு வருகிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக் அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது.

தமிழக அரசு சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் முலம் சென்னை காவல் ஆணைஅர்ர் சவுக்கு சங்கருக்கு எதிராக கடந்த மே 12-ம் தேதி பிறப்பித்த தடுப்புக்காவல் ஆணையை இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இன்று உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.   தமிழக அரசு சவுக்கு சங்கரின் குண்டர் தடுப்புக்காவல் ஆணையை உறுதி செய்து பிறப்பித்துள்ள உத்தரவின் ஆங்கில மொழியாக்க நகல் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது.