பெங்களூரு

ர்நாடகாவில் உள்ள  தனியார் நிறுவாங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்  பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதா தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மசோதா நிறைவேற்றப்பட்டால், கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50 சதவீதம் நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாக அல்லாத பணிகளிலும், 100 சதவீதம் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். இந்த இடஒதுக்கீடு விதியை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்,

“கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் செயல்படுத்தப்படும் மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.